இயக்குநர் இமயம்
"இயக்குநர் இமயம்" காலமானார்
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என கொண்டாடப்பட்ட பாரதிராஜா, வயது 84, உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941ஆம் ஆண்டு ஜூலை 17 இல் பிறந்தவர் பாரதிராஜா. இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற் பெயர் சின்னசாமி ஆகும். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த பாரதிராஜா, இயக்குநர் பி புல்லையா விடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணுக்கங்கள் அனைத் தையும் சுற்றார்.
"16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர சுவி தைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ் செல்வன், அந்தி மந்தாரை, தாஜ் மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரி யாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.
ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். இயக்கம் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் என பன் முகத்திறமை கொண்டவர் பாரதிராஜா.
பாரதிராஜா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜாவின் திருவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்படுவதோடு வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் இன்று (ஜூன் 11) பிற்பகல் 3 மணிக்கு மேல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அவருக்கு அரசு மரியாதை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
www.tamilthakaval.org
