The assistance provided by the IMHO organization to the Jaffna Teaching Hospital.

The assistance provided by the IMHO organization to the Jaffna Teaching Hospital.

Updated Date: 26 February 2026

IMHO நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகிய டாக்டர் எஸ். ரகுராஜ், MD அவர்களுக்கு அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் மனிதாபிமான சேவைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கியதில் பெருமை கொள்கிறோம்.
2003 ஆம் ஆண்டு அவருடைய இல்லத்தின் அடித்தளத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்திலிருந்து இன்று வரை IMHO ஒரு சிறப்பான மனிதாபிமான இயக்கமாக வளர்ந்துள்ளது. முதல் பத்து ஆண்டுகள் தலைவராகச் சேவை செய்த அவர், தொடர்ந்து இயக்குனர் சபை உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான திட்டங்களை இலங்கையின் பல மாகாணங்களில் நிறைவேற்றி வருகிறது.
குறிப்பாக, IMHO நிறுவனம் Teaching Hospital Jaffna மருத்துவமனைக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
இன்று நடைபெற்ற சந்திப்பில், எங்கள் மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றி விளக்கமளித்தோம். எங்கள் பணிகளை பாராட்டிய அவர், தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாதவம், குடில், மடம் போன்ற முக்கிய திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
IMHO மற்றும் டாக்டர் ரகுராஜ் அவர்களின் தொடர்ந்த மனிதாபிமான சேவைக்கும், யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

www.tamilthakaval.org