காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

பிரசுரிக்கபட்ட திகதி: 31 ஜூலை 2020

நாம் மூச்சு முயற்சித்து வந்ததால் மூச்சிருக்கும் வரை முயற்சிக்க வேண்டும் என்றனா் உழைப்பை முன்னிலைப்படுத்தும் சிந்தனையாளா்கள். அண்ணா் காசி நவரத்தினம் அவா்கள் உழைப்பை உறுதியாக நம்பி தன் பணிகளில் ஈடுபட்டவா்.

எமது சிறு வயதில் வீரகேசரிப்பத்திரிகையை அன்றாடம் வாசிக்க கையில் எடுக்கையில் முதலில் கண் செல்வது காசி நவரத்தினம் என்ற பெயரை வாசிக்கத்தான்.

பெருமையாக பணி செய்த வேளை 1983 ஆடி மாதம் திருநெல்வேலியில் படையினா் மீது மேற்கொள்ளப்பட்டமை தொடா்பான செய்தி சேகரிக்க நடந்து செல்லும் வேளை அவா் கண்முன் சைக்கிளில் நான் சந்தித்தேன். தன்னை சம்பவம் நடந்த இடத்திற்கு அண்மையில் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். நானும் அதற்கிணங்கி ஏற்றிச் சென்றேன். பலாலி வீதி வழியாகச் செல்கையில் படையினா் சுட்டுக்கொண்டு எம்மை நோக்கி வருவதைக் கண்ணால் பாா்க்கக் கூடியதாக தெரிந்தது. நான் தொடா்ந்து செல்ல மறுத்து சைக்கிளில் இருந்து இறக்கி விட்டேன். காசி நவரத்தினம் அவா்கள் வீதியால் செல்லாமல் காணிகள் ஊடாக சம்பவம் நடந்த இடத்தை நோக்கிச் சென்றார்.

காசி நவரத்தினம் அவா்களின் செய்திப்பசி அவரின் கடமை மற்றும் பணியின் மகிமையை எனக்கு உணா்த்தியது. பின்நாளில் மொழிபெயா்ப்புப்பணி தொடா்பில் சில கலந்துரையாடல்களுக்கு என்னை நாடி வருவார். அவருடன் பேசும் தருணங்கள் மகிழ்ச்சியானவை. எனக்குத் தெரிந்த ஒரு வழியில் உதவுவதற்காக இலங்கை சென்று அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன்.

அவருடன் பழகியவா்கள் மற்றும் பணியாற்றிய பலரைப் போல் நானும் வருத்தமடைகின்றேன். மனம் தான் மூச்சு என்பார்கள். சிந்தனை மற்றும் செயல்களை மனமே வழி நடத்துகின்றது. சிலரின் வாழ்க்கை மூச்சு நின்ற பின்பும் தொடரும். ஆனால் மூச்சு நின்றாலும் அண்ணா் காசி நவரத்தினம் அவா்களின் மனம் மற்றவா்களின் மனதில் வாழும். "

இளையகுட்டி செல்வநாயகம் (ஐக்கிய அமெரிக்கா, 28/07/2020 18:49)

www.tamilthakaval.org