மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் வருடாந்த ஒன்றுகூடல்

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் வருடாந்த ஒன்றுகூடல்

பிரசுரிக்கபட்ட திகதி: 09 ஆகஸ்ட் 2025

கனடாவில் வசிக்கும் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் கல்லூரி  நண்பர்களுடன் ஒன்றிணைக்கும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு, எதிர்வரும் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்கார்பரோவில் உள்ள மில்லிகன் பூங்காவில் நடைபெறவுள்ளது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து, பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய நினைவுகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

இந்த நிகழ்வில் விளையாட்டுக்கள், இசை, சுவையான உணவு, மற்றும் மகிழ்வான உரையாடல்கள் என்பன இடம்பெறும்.

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களை குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இவ்விழாவை ஒழுங்கு செய்யும் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா வேண்டிக் கொள்கிறது. 

நிகழ்வு குறித்த விவரங்கள்: 

  • திகதி: ஞாயிற்றுக்கிழமை, ஆவணி 17, 2025

  • நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

  • இடம்: மில்லிகன் பூங்கா - பகுதி 1, 5555 ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு, ஸ்கார்பரோ (Milliken Park – Area 1, 5555 Steeles Ave E, Scarborough

https://drive.google.com/file/d/1fmqRiwdDDYWXUQL7f4naPvQNk5HW7Yh6/view?usp=sharing 

647-948-9587 | www.mahajana.ca

 

 

 

 

 

www.tamilthakaval.org