புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகர் காலமாகியுள்ளார்.

புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகர் காலமாகியுள்ளார்.

Updated Date: 23 January 2018

புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகர் காலமாகியுள்ளார். பொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் முன்னணிப் பாடகர்களின் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார் அவர். இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பலவற்றை பாடியது மாத்திரமல்லாது, இந்தியாவில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இலங்கையில் பொப்பிசைச் சக்கரவத்தி என பலராலும் அழைக்கப்பட்ட மனோகரன், தமிழ், சிங்களம், மலே, ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் என கலைஞர்கள் கூறுகின்றனர்.

”சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா“ என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வரும் ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

1970, 1980 களில் இலங்கை வானொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

அனைவராலும் பாராட்டப்பட்ட இவர், சென்னையில் இன்று இரவு 7.30 இற்கு காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

www.tamilthakaval.org