முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வரின் மரணசெய்தி

முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வரின் மரணசெய்தி

பிரசுரிக்கபட்ட திகதி: 10 பெப்ரவரி 2020

முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வரும் (1979 - 1983) தற்போதைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களின் தந்தையுமான  திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் சிட்னியில் தமது 94 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் பிரபல சட்டத்தரணியும் ஆவார்.

அன்னாரின் இழப்பிற்கு எமது இதயபூர்வமான கண்ணீர் வணக்கத்தையும்  அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

யாழ் நகர முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமானார் !

யாழ் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் காலமானார்.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருந்த அமரர் ராஜா விசுவநாதன் அவர்கள், தமிழர்களுடைய உரிமைகளுக்காக பல்வேறு அரசியல் தளங்களில் முன்னின்று உழைத்தவர் மட்டுமன்றி சமூகச் செயற்பாட்டிலும் உழைத்தவராக இருக்கின்றார்.

Date : Sunday, 16th of February
MAGNOLIA CHAPEL
Macquarie Park Cemetery & Cremetorium.

Address: Corner of Delhi road & Plassey road
NORTH RYDE NSW 2113

9.00 am to 9.30 am Family viewing

9.30 am onwards public viewing & funeral rites

www.tamilthakaval.org