முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் காலமானார்

முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் காலமானார்

பிரசுரிக்கபட்ட திகதி: 01 ஏப்ரல் 2021

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் காலமானார்!

01 ஏப்ரல் 2021
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் அவர்கள் நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த அருட்தந்தை இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் மணியளவில் உடல் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதில் மரணமடைந்துள்ள ஆண்டகை தமிழர்களின் உரிமைக்காக நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்து வந்த ஒருவர் என்பதுடன் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. உரிமைப்போராட்டத்தில் இரண்டறக் கலந்திருந்து .ஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்த.தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்த ஆண்டகை ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும். இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர் எம் ஆயர் அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும் 146000 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று உலகத்துக்கு உரத்துச்சொல்லிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.

சிறை­களில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியைg வெளிக்கொணர ஓயாது உழைத்தார்.
யுத்­தத்தால் தமது இல்­லி­டங்­களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்­சிகளை மேற்கொண்டார். முள்ளிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் அவர் காணிகளை, வீடுகளை வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.


யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வோதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவி­களைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார். யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.


2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசாலையில் கடற்­படையினருக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலின்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.
ஆலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் செல்கின்ற செய்தியை அறிந்த ஆயர் ஆபத்தான அந்தச் சூழ்நிலையில் அன்றைய மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசாலைக்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இச்சம்பவம் தொடர்பில் வத்திக்கானுக்கு தகவல்களை அனுப்பினார்.


2007ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலுப்பைக்கடவை படகுத்துறைப் பகுதியில் விமானக் குண்டுத்தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அந்தத் தாக்குதல் நடந்த சில மணித்தியாலங்களில் குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளாருடன் அந்த இடத்திற்கு சென்று அம் மக்களின் துயரத்தில் பங்­குகொண்டதோடு கொல்லப்பட்ட­வர்கள் கடற்புலிகள் என்ற அரசின் செய்­தியை மறுத்து பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை உலகத்திற்குத் தெரியப்படுத்தியவர்.


மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்களோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளை எழுத்து மூலமாக அறிக்கையாக முன்வைத்தார். காணாமலாக்கப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு போன்ற உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பல விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வின் அவ­சியம் போன்ற விடயங்களை அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வன்னியில் இருந்த மக்களில் 146,679 பேருக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை கேட்டு அரசாங்கத்தை ஆட்டம்காணம் செய்தார்.

 

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

www.tamilthakaval.org