அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பிரசுரிக்கபட்ட திகதி: 21 ஜனவரி 2025

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்.

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார  பேரவை வளாகத்தில் குறித்த சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ, மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மற்றும்  யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் 'திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  வரவேற்றுள்ளார். 

www.tamilthakaval.org