(06-12-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி)

திரு. A. F. தர்மசீலன் (பயஸ்)

(இளைப்பாறிய பொலிஸ் பரிசோதகர்)

A. F. தர்மசீலன் (பயஸ்)

மறைவு: 03 டிசம்பர் 2025

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கொம்பனித்தெரு - கொழும்பு-02, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. A.F.தர்மசீலன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. B.A. பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு.திருமதி பீட்டர் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற கிறிஸ்டீன் அன்ஜலா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜாவின் பாசமிக்க தந்தையும்,

கஜனின் (பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி, நீர்கொழும்பு) அன்பு மாமனாரும்,

அஸ்விதா, வைஷாலி (ஆவே மரியா கன்னியர்மடம், நீர்கொழும்பு), ரெனால்ட் (மேரி ஸ்டெலா கல்லூரி, நீர்கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 336/232, பேஸ்லைன் வீதி, கட்டுவ, நீர்கொழும்பு அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-12-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் நீர்கொழும்பு ரோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2025 00:00)