திரு. அ. மரியதாஸ் ஜெயரத்தினம்
(ஓய்வுநிலை உப அதிபர்-திரு இருதயக் கல்லூரி, கரவெட்டி)
மறைவு: 10 செப்டம்பர் 2024
யாழ். கொடிகாமம் வீதி, நெல்லியடி, கரெட்டியைப் பிறப்பிடமாகவும் (திரு. இருதயக் கல்லூரி அருகாமை), மாட்டின் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளப்பு மரியதாஸ் ஜெயரத்தினம் அவர்கள் 10-09-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், திருமதி. ஜோசப் (ஓய்வுநிலை ஆசிரியை-திருக்குடும்பக் கன்னியர் சபை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு- அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோசப்-சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திரு. குணரத்தினம் (கனடா), காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சுகிர்தமலர் மற்றும் செல்வி. ஜஸ்மின் (ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர், வடமராட்சி தெற்கு- மேற்கு பிரதேசபைகள்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
திரு. ஜோய் மாதவன் (விரிவுரையாளர், தொழில்நுட்பபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), திரு. ஜோண்சன் திவ்வியானந்த் (ஆசிரியர்- கனகராயன்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
திருமதி. ஜெனிற்றா (கனடா), காலஞ்சென்ற ஜெனற் அபிஷாலினி அன்பு சிறிய தந்தையும்,
திரு. அன்ரன் (கனடா), திரு. ஜெயம் (கனடா), ஆனந்தா (யோசப் மாஸ்டர்), Rev. Sr. Francis திருக்குடும்ப கன்னியர் சபை, திரு. குமார் (கனடா), மேரி நவமணி (கனடா), காலஞ்சென்ற ஜெயராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருமதி. ஜீனா கிறிஸ்ரனா அவர்களின் மாமனாரும்,
ஷைனி கிறேஷியா அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 11-09-2024 புதன்கிழமை 25,மாட்டீன் ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்திலும், 12-09-2024 வியாழக்கிழமை திரு. இருதயக்கல்லூரி அருகாமையிலுள்ள அவரது வீட்டிலும் வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கரவெட்டி கத்தோலிக்க சேமக்காலை கீரிப்பல்லியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
