திரு. A. N. S. திருச்செல்வம்
(கலாபூசணம்,ஊடகமாமணி,தேசோதய தீபம், கலைமாமணி, கலைப்பிரதி,கலைகலசம்,சமூகதிலகம், சமூகசுடர்,வாழ்நாள் பத்திரிகையாளன்(சிரேஷ்ட ஊடகவியலாளர், உள்ளூராட்சி ஓய்வுநிலை நூலகர்)
மறைவு: 25 ஜூன் 2026
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையினைப் பிறப்பிடமாகவும், புற்றளையினை வசிப்பிடமாகவும் கொண்ட A. N. S. திருச்செல்வம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் வடமராட்சி கிழக்கு), சிவதேவன்(பிரான்ஸ்), அபிரா (வைத்தியர்- ஆதாரவைத்தியசா லை -பருத்தித்துறை ), கிரிசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் - பருத்தித்துறை ),
துவாரகன்(உதவி அஞ்சல் அதிபர்-வல்வெ ட்டித்துறை ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமோகன்(இலங்கை முதலீட்டுசபை -யாழ்ப்பாணம்), நிருஷா(பிரான்ஸ்), டினேஸ்குமார்(வைத்தியர்-பெலாறஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேகா(பிரான்ஸ்), ஷக்ஸி(பிரான்ஸ் ), அஸ்விதன்(புற்றளை ), அஷ்மிதன்(புற்றளை ) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மு.ப 10:00 மணியளவில் ஆணை விழுந்தான் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2026 15:32)
