திரு. கனகசபை அரியரட்ணம் (அரியம் மாஸ்டர்)

(கொழும்பு பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர், பாரிஸ் மெய்கண்டான் அச்சக உரிமையாளார்)

கனகசபை அரியரட்ணம் (அரியம் மாஸ்டர்)

தோற்றம்: 02 மே 1950 - மறைவு: 04 மார்ச் 2025

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுயை வாழ்விடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை அரியரட்ணம் அவர்கள் 04-03-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சபாரெத்தினம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா, அனியேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எவன், நாதன் ஆகியோரின் அப்பப்பாவும், 

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் (முன்னாள் அதிபர் - கலைஞர் செல்வம்), குணரத்தனம், சபாரத்தினம் (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி - கிளிநொச்சி), புஸ்பராணி மற்றும் பூகோதை (ஆசிரியை - கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நடராசா (பிரான்ஸ்) அவர்களின் ஒன்று விட்ட  சகோதரரும்,

அன்னபூரணி (சுவிஸ்), காலஞ்செனறவர்களான கனகவதி, நாகேஸ்வரன் (ப.இ.ஸ்தாபனம்), மற்றும் பன்னீர்செல்வம் (கனடா), காலஞ்செனறவர்களான தனபாலசிங்கம், பரமநாதன், ஆனந்தபவான், மற்றும் கமலாதேவி, பரஞ்சோதி, கருணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்காக:-

07-03-2025 வெள்ளி பிற்பகல் [15:00 - 18:15]

08-03-2025 ஞாயிறு பிற்பகல் [15:00 - 18:15]

12-03-2025 புதன் பிற்பகல் [15:00 - 16:15]

15-03-2025 சனி பிற்பகல் [15:00 -16:15]

இறுதிக்கிரியை -தகனம்:-

18-03-2025 செவ்வாய்கிழமை காலை 8:30 மணி முதல்

@

Crematorium des Johncherolles

95 Rue Marcel Sembat- 93430 Villetaneuse

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2025 05:00)