திருமதி. ஆச்சிமுத்து பொன்னம்பலம்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

ஆச்சிமுத்து பொன்னம்பலம்

தோற்றம்: 13 மே 1930 - மறைவு: 22 ஜனவரி 2025

யாழ் கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ஆச்சிமுத்து பொன்னம்பலம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை இரவு 8:00 மணியளவில் தனது 96 வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசநாயகம், இரத்தினம், சின்னம்மா, தருமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தினி வாகீசன் (அதிபர் - யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் ), கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளீதரன் (யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட முதலாவது பீடாதிபதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாகீசன் (ஓய்வுநிலை அதிபர்), ஸ்ரீமுரளிதரன் (உள்ளூராட்சி உதவியாளர் வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிவாகர் (Pursuing a PhD in Computer Engineer at the University of Manitoba), டிலக்‌ஷன் (MSc inData Science and Artifical InteligenceUniversity of Moratuwa), மலரவன் (ஊவா வெல்லா பல்கலைக்கழகம்), எழிலவன் (றுகுணு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

டர்சனா டிவாகர் (Studied MScin Biosystems Engineer at the University of Manitoba) அவர்களின் பேர்த்தியும்,

ஹரின், றேவன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கோப்பாய் கிளுவானை ஒழுங்கையில் உள்ள அன்னாரது இல்லத்தில் 23-01-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று கந்தன் காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 05:00)