திருமதி. ஆறுமுகம் கனகாம்பிகை
தோற்றம்: 29 மார்ச் 1955 - மறைவு: 13 மார்ச் 2024
யாழ். சுப்பிரமணியம் வீதி, இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் கனகாம்பிகை அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அருளாம்பிகை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிரஞ்சினி (நூலக தகவல் உதவியாளர்-யாழ். பல்கலைக்கழகம்), தனாகரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் Habitattor Humanity - புத்தளம்), குகநந்தினி (மருந்துக் கலவையாளர் - ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை), லோகநாதன் (சுங்கப் பரிசோதகர் - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரன், கமலாம்பிகை, விக்கினேஸ்வரன், குகேஸ்வரன், காலஞ்சென்ற வேதாம்பிகை மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னமுத்து, கந்தசாமி (ஓய்வு நிலை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் - வடகிழக்கு மாகாணம்), நமசிவாயம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனியும்,
கிரிஷா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்), கமல்குமார் (பொது சுகாதார பரிசோதகர் - பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிவேஸ், ருக்ஷிகா, ஜெயகிருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், மங்கையற்கரசி மற்றும் பராசக்தி, காலஞ்சென்றவர்களான இராமநாதன், தில்லைநாதன், மனோன்மணி மற்றும் சந்திரமதி, சுந்தரலிங்கம், கௌரி, சத்தியராணி, பேராநந்தன் ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் அன்னாரது இல்லத்தில் 14-03-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
