Mr. Aarumugam Sivasubramaniyam
Deceased: 14 July 2025
யாழ். நீர்வேலி மேற்கு கரந்தனைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நளாயினி (இத்தாலி), தமயந்தி (இலண்டன்), சுபாகினி (ஆசிரியை - உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிக்குமார், சிறிகாந்தன், தர்மிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், சிவஞானம், காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரி, சிவபாதம் மற்றும் சிவலோகநாதன், சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுமிதன், கவிமித்ரா, ஹரிசரண், நிவேதன், தாரகன், பூர்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
