Mr. Aasai Thiyagarajah

Aasai Thiyagarajah

Date of Birth: 27 September 1939 - Deceased: 12 July 2025

மலேசியா - Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ். மின்சார நிலைய வீதி  தெல்லிப்பளை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆசை தியாகராஜா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று தனது 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசை - தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராமிலன், சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சத்தியபவானி, கதிர்வாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சோனாக்‌ஷி, பிரவீணா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான  குமாரசுவாமி, குருகுலசிகாமணி, லீலாவதி மகாலிங்கம், அரியரத்தினம், குமாரச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 புதன்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2025 04:00)