Mr. Aasirvatham Atputharajah [Vincent]
Deceased: 06 August 2024
யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், சுவீஸ்-Thurgau மாநிலம் Romanshorn ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆசிர்வாதம் அற்புதராஜா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருமதி சுகந்தி (பிளஸ்சில்டா ) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வன் அல்வின், செல்வன் அகுஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 08.08 2024 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 14-08-2024 புதன்கிழமை காலை 9.300 மணி வரை Friedhof Stadelstrasse-2 , Romanshorn என்ற இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதி கிரியைகள் 9.30 மணிக்கு பின்னராக அருகில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு (Kirche St. Johannes) எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
