திருமதி. அகிலாண்டம் நடேசன்
தோற்றம்: 09 செப்டம்பர் 1953 - மறைவு: 24 மே 2025
தென் இந்தியா - புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா, திருக்குளம்பூரை பூர்வீகமாகவும், வெதமுல்ல - இறம்பொடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அகிலாண்டம் நடேசன் அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பம்பையன் - வெள்ளையம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிஷாந்தினி, பவித்ரா, சங்கிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சங்கர்கணேஷ், பிரதீப்குமார் ஆகியோரின் மாமியாரும்,
மிருஸ்னி ரேஸ்தன், செந்தூர் மித்ரன், சவிதூர் வரேன்யன், திவ்யேஸ், கவினேஸ், அகிஷா ஆகியோரின் பாசமிக்க அம்மாயியும்,
காலஞ்சென்றவர்களான பேச்சியம்மாள், பொன்னழகு (நியூ பேவரிட்ஸ் - நாவலப்பிட்டி), தங்கராஜா, சரஸ்வதி (செல்வம் ஸ்டோர்ஸ் - வெதமுல்ல), நாகலட்சுமி (நதியாஸ் டெக்ஸ்டைல் - நாவலப்பிட்டி), சேதுராமன் (நியூ லலிதா கோல்ட் ஹவுஸ் - காலி), கமலம் (சாந்தினி கோல்ட் ஹவுஸ் - காலி), இந்திராணி (PKR ஸ்டோர்ஸ் - இரட்டைப்பாதை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, தனுஷ்கோடி, கருப்பையா, கனகரட்ணம் மற்றும் செல்லையா, சொக்கலிங்கம், சந்திரா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில்திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
