திருமதி அகில் துரைசாமி

(Retired Teacher)

அகில் துரைசாமி

தோற்றம்: 01 டிசம்பர் 1929 - மறைவு: 19 மே 2020

மலேசியா பினாங்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகில் துரைசாமி அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணநாயகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், சுகிர்தம் ரட்ணநாயகம்(கொழும்பு மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும்,

காலஞ்சென்ற கிறிஸ்டியன் டேவிட் துரைசாமி(இலங்கை மின்சார சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
முன்னாள் உதவி முதல்வர் போல் சத்தியநேசன், சாமுவேல் காருண்யநேசன், அன்ரு திவ்வியநேசன் மற்றும் டானியல் ஜெபநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
இந்துமதி நேசன், பிரமளா அன்ரு, யெனி டனி ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
நயோமி, ஜோஷுவா, ஜோன், ஜெரமி மற்றும் ஜென்சன் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் நல்லடக்கம் லண்டன் மனோபார்க் கல்லறையில் நடைபெறும். ஆராதனை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
போல்- (மகன்) Mobile : +44 736 543 8155  
நேசன்(Bubby) -  (மகன்) Mobile : +44 776 874 5622   
அன்ரு- ( மகன்) Mobile : +44 753 436 9950   
டனி- (மகன்)  : +44 794 715 8313  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2020 10:19)