திரு. அழகரத்தினம் கோபாலச்சந்திரநாயகன்

(ஓய்வுபெற்ற முகாமையாளர் இலங்கை வங்கி, அகில இலங்கை சமாதான நீதவான்)

அழகரத்தினம் கோபாலச்சந்திரநாயகன்

தோற்றம்: 14 செப்டம்பர் 1950 - மறைவு: 26 டிசம்பர் 2025

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மருதநகர் கிளிநொச்சி, குமரகோட்டம் கோண்டாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகரத்தினம் கோபாலச்சந்திரநாயகன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அழகரத்தினம் - திலகவதிநாயகம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களானசிவராஜசிங்கம் - சிவபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் அன்பு கணவரும்,

கார்த்திகா (கொழும்பு), பிரதீபா (கால்நடை வைத்தியர், இலண்டன்), செந்தூரன் (முகாமையாளர் - எலயன்ஸ் பைனான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரபவாணி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான  ஜெனச்சந்திரரட்ணம், சந்திரபவானி மற்றும் திலகச்சந்திரரட்ணம் (பிரான்ஸ்), சந்திரவதனி (இலண்டன்) காலஞ்சென்ற அழகச்சந்திரநாயகம் ஆகியோரின் அன்பு ச் சகோதரனும்,

காலலஞ்சென்ற சண்முகலிங்கம், தேவராணி, ராதிகா (பிரான்ஸ்), திருநாமலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜ்குமார் (பிரான்ஸ்), டினேஸ் (இலண்டன்), ஜெயகலையரசி ஆகியோரின் மாமனாரும்,

பிரபாகர், ராகவி (இலணடன்), நேர்த்திரா, துதித்ரா, ஆதித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் ''பத்மா பவனம்'' மருதநகர், கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் திருநகர் இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2025 00:32)