திருமதி. அழகரட்ணம் சாந்தநாயகி

அழகரட்ணம் சாந்தநாயகி

தோற்றம்: 29 நவம்பர் 1942 - மறைவு: 17 மார்ச் 2025

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகரட்ணம் சாந்தநாயகி அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

அழகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரலிங்கம், தவமணி, இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், மகாதேவன், கமலாதேவி, காலஞ்சென்ற கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அகிலன், குமுதினி, விபுலன், கபிலன், குசேலன், சகிலன், கோகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி, விக்கினேஸ்வரன், வனஜா, கவிதா, அனுசா, சிபோசனா, மோகனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-03-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-03-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:30 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் மதியம் 1:30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2025 04:00)