திருமதி. அழகுசுந்தரம் செல்வமலர் (மலர் அக்கா)
மறைவு: 28 மார்ச் 2025
யாழ். வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருச்சி - இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகுசுந்தரம் செல்வமலர் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்கள் ரேஸ் பொன்னுத்தரை - செல்வரத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற அழகுசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், உமாகரன், மாலினி ஆகியோரின் அன்பான தாயாரும்,
ரவிக்குமார், சுரஞ்சினி, துவாரகா ஆகியோரின் மாமியாரும்,
ஓவியா, நித்யா, இனியா, அர்யூன், தேவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வசந்தமலர், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமாரி, யோகேந்திரன், சிவக்குமார், பாலகுமார், காலஞ்சென்றவர்களான சந்திரகுமாரி, செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் (இல-23, பாரதி தெரு, அம்மன் நகர், திருச்சி 21) இல் நடைபெற்று, புகழுடல் திருச்சி ஓயாமாரி மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
