திரு. பழனியாண்டி சந்திரபோஸ்
தோற்றம்: 22 பெப்ரவரி 1954 - மறைவு: 13 ஜனவரி 2025
ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரபோஷ் பழனியாண்டி அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனியாண்டி - மாணிக்கம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி - வௌ்ளையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
கவிதா, லெனின்ராஜா, சிறிதரன் (டுபாய்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
தினேஷ், கார்த்திகா, டிலுக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயலக்சுமி (இந்தியா), குட்டிப்பாப்பா, லெட்சுமி, ராஜா, ராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அக்ஷரா, விராத், சாக்ஷி ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
விஜயரட்ணம், ஜெயரட்ணம் (இலண்டன்), ஜெயந்தினி (டுபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-01-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
86/44, சென். பெனடிக் மாவத்தை,
கொழும்பு-13.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
