திரு. அல்லிமுத்து குமார்

(முன்னாள் உரிமையாளர் - My Son Stantinery)

அல்லிமுத்து குமார்

தோற்றம்: 24 மே 1946 - மறைவு: 10 அக்டோபர் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜா-எல "லேக் சிட்டி ஹோம்" யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்லிமுத்து குமார் அவர்கள் 10-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. அல்லிமுத்து தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராம்குமார், லட்சுமணன் ஆகியோரின் இளைய சகோரரும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெய்கணேஷ், கீதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ராஜேஸ், சசிலா ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும்,

ஹரிஜெயன், கிரிஷ்வஜெயன், விகான் ஜெபன், ரிதன், திர்விகா, பிரநவ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-10-2025 சனிக்கிழமை முதல் மோடர்ன் மலரச்சாலை (இல-120, நீர்கொழும்பு வீதி, கந்தானை) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கப்புவத்தை ஜா-எல மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2025 04:00)