Mrs. Amarawathy Punniyaseelan

Amarawathy Punniyaseelan

Date of Birth: 03 August 1948 - Deceased: 09 October 2026

திருகோணமலையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமராவதி புண்ணியசீலன் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று தனது 78 வது வயதில் இறைவனின் பாதங்களில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், பூர்வீகமாக கொண்ட சங்கிலி கிளமன் -  நல்லம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வியும்,

கார்மலின் கிளமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சின்னையா புண்ணியசீலன் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

பிரேமகலா (GGC NGO நிறுவனர்), கார்த்திகா (நடன ஆய்வாளர், கனடா) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

இசடோர் சுரேஸ்குமார் (பிரதான பொலிஸ் பரிசோதகர், திருமலை), பரமானந்தன் பார்த்திபன் (மென்பொருள் ஆய்வாளர், கனடா) ஆகியாரின் பாசமிகு மாமியாரும்,

ஓசனா (இலண்டன்), ரோமன் ரிசட்சன் (இலண்டன்) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

அட்டாரா, ஆர்வி ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-10-2026 சனிக்கிழமை முதல் 12-10-2026 திங்கட்கிழமை வரை அன்னாரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, திங்கள் மாலை 3.00 மணியளவில் திருமலை புனித மரியாள் தேவாலயத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் சரீரம் சேமக்காலை வீதியிலுள்ள கத்தோலிக்க சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி

இல- 30, கணேஷ் லேன், அந்தங்குளம்,

திருகோணமலை.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 71 824 2340

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2026 00:00)