திரு. அம்பிகைபாகன் மகேந்திரன்
தோற்றம்: 04 ஏப்ரல் 1961 - மறைவு: 10 ஜூலை 2022
யூனியன் கல்லூரியின் அறக்கட்டளை நிதியங்களிலொன்றான அமரர்.தங்கம்மா அம்பிகைபாகன் நிதியத்தின் ஸ்தாபகர் DR.சகுந்தலாதேவி அம்பிகைபாகன் (சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவபீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புச்சகோதரன், யூனியன் கல்லூரிப் பழைய மாணவன் அம்பிகைபாகன் மகேந்திரன் அவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை மல்லாகத்தில் இறைபதமடைந்தார்.
கே.கே.எஸ் வீதி மல்லாகத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்னார்
அமரர்கள் அம்பிகைபாகன், தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான பராசக்தி, அம்பிகாதேவி, சகுந்தலாதேவி (சிரேஸ்ட விரிவுராயாளர், உடற்கூற்றியல் துறை, மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்), பரமேஸ்வரி (சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலகம், யாழ்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அமரர்களான தெம்வேந்திரகுமாரசுவாமி, நிர்மலன் ஆகியோரின் மைத்துனரும்,
அமரர் நிர்மலதாஸ், மோகனா - குணசீலன் (அவுஸ்ரேலியா), நிர்மலகுமார் - உதயபானு (கோபுரம் அலுமினிய தொழிற்சாலை- இணுவில்) தர்சினி - சிவநாதன் (மல்லாகம்), பாமா - தவசீலன் (லண்டன்), பூமா - ஐங்கரன் (ஜேர்மனி) மேனகா - வசீகரன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீரன், பவித்திரா, கிருஸ்வின், தனிசிகா, தணியா, தியானா, அஜீனா, ஆரபி, வைணவி, சோபிமா, மெலினா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 11-07-2022 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தொந்தனை மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புகளுக்கு:
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2022 07:13)
