திரு. அம்பலம் சிவானந்தன்
(ஓய்வுநிலை விவசாயப் போதனாசிரியர், முன்னாள் சர்வதேச கெயர் நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர்)
தோற்றம்: 25 ஜனவரி 1938 - மறைவு: 01 நவம்பர் 2025
யாழ். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கருவப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலம் சிவானந்தன் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலம் - நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவறஞ்சன், சிவாஜினி, சிவரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வி, பகீரதன், கஜபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஜன், அனோஜன், சுவர்ணா, சரண்ஜா, சின்மயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, விசாகம்மா, சண்முகசுந்தரம் மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கருவப்புலம் வீதி, 5ம் ஒழுங்கை கொக்குவில் கிழக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மகள்:- +94 72 230 5987
பெறாமகன்:- +94 77 759 4962
மருமகள்:- +94 77 739 6200
www.tamilthakaval.org
