Mr. Ambalavanar Kadamparathinam
Date of Birth: 07 August 1961 - Deceased: 05 December 2025
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல், முல்லைத்தீவு முத்தையன்கட்டு, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கடம்பரத்தினம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - சந்திரராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவாஜினி (சிலோசனா) அவர்களின் அன்புக் கணவரும்,
யெஸ்வின், யெகஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராமநாதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமார் (இலங்கை), சாந்தரூபி (சுவிஸ்), சின்ராசன் (கனடா), ராஜகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 - 3:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று O'Neill Funeral Home (6324 Main St, Whitchurch-Stouffville, ON L4A 7Z8, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
