ஸ்ரீமதி. அம்பிகை பாலசுந்தரக்குருக்கள்
மறைவு: 12 ஜூலை 2026
யாழ். பருத்தித்துறை ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி கோவிலடியைப் (கோட்டு வாசல் அம்மன் கோவில்) பிறப்பிடமாகவும், இல- 55/49, கல்லூரி வீதி, நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அம்பிகை பாலசுந்தரக்குருக்கள் அவர்கள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமலிங்கக்குருக்கள் - சாரதாம்பாள் தம்பதியினரின் மகளும், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் ஆதீன பரம்பரை குருக்களான சுவாமிநாதக்குருகள் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரக்குருக்கள் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவபாக்கியம், செந்தில்நாதசர்மா, பஞ்சாட்சரசர்மா, ஶ்ரீதரசர்மா, இராஜேஸ்வரி, மகேஸ்வரக்குருக்கள், ரேவதி ஆகியோரின் அருமை சகோதரியும்,
வித்தியானந்தக்குருக்கள், கௌரி, ஆனந்தவல்லி, பாலாம்பிகை, சண்முகேஸ்வரக்குருக்கள், அனுராதா, கந்தராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,
பிரியதர்சினி, பாலகணேஸ்வரக்குருக்கள், சிவாஜினி, மனுவித்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துளசிகாந்தக்குருக்கள், அபர்ணா, பிரகதீஸ்வரசர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யன், நிதர்சன், வர்ஷினி, வித்யாசாகர், திவ்யாசாகர், நிதேஷ்சாகர், சௌம்யா, ரித்திக் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
வேதாந் , ஹிரண்யா, மஹதி, மாதேவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-07-2026 புதன்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் (நீராவியடி) நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 737 1255
+94 77 360 4087
www.tamilthakaval.org
