Mr. Ambigaipakan Markandu

Ambigaipakan Markandu

Date of Birth: 17 April 1961 - Deceased: 02 September 2024

யாழ். காரைநகர் வெடியரசன் வீதியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பிகைபாகன் மார்க்கண்டு அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கந்தையா-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வனிதா (ஆச்சி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

நர்மதாவின் அன்புத் தந்தையும்,

சந்தீப்பின் ஆசை மாமனாரும்,

நிலாவின் அன்பு பேரனும்,

வரலக்‌ஷ்மி (ராணி), பேரின்ப நாயகி (வதனி), சந்திரசேகர் (சந்திரன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, மகேஷ்வரன், ரூபி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 07-09-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரையும், 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00-9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 9:00-10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2024 04:00)