Mr Ambikaipakan Nagendran
(ஓய்வுநிலை மாகாணப்பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பிராந்திய இணைப்பாளர் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம், திட்டப்பணிப்பாளர் மாவட்டச் செயலகம் கிளிநொச்சி)
Date of Birth: 26 October 1938 - Deceased: 10 May 2024
யாழ். புத்தூர் சந்தி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சாவகச்சேரி கெருடாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பிகைபாகன் நாகேந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகன்-அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற பவானம்மா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
இந்திரகௌரி(கனடா), விஜயகௌரி(அவுஸ்திரேலியா), நித்தியகௌரி (நோர்வே), சாந்தகௌரி(ஆசிரியை – யா/ஆனைப்பந்தி மெதடிஸ்ற்மிஷன் வித்தியாலயம்), கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரன்(கனடா), சிவகுமாரன்(அவுஸ்திரேலியா), கௌரீஸ்வரன் (நோர்வே), சிறிகுமார்(உதவி ஆணையாளர்- கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சைந்தவி, ஆரூரன்(கனடா), ஜனனி(லண்டன்), சுபானி(நோர்வே), தர்ஷிகா, கேஷிகா(அவுஸ்திரேலியா), ஷாரிகா(மாணவி யா/வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, வரதலட்சுமி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
