Mrs. Amirthavalli Punniyasingam

Amirthavalli Punniyasingam

Date of Birth: 04 April 1938 - Deceased: 09 April 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தவல்லி புண்ணியசிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற புண்ணியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரஸ்வதி, கமலவேணி, காலஞ்சென்ற காந்தித்திலகர் மற்றும் கிருஷ்ணவேணி, நிமாலினி, பகீரதன், நிமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராமநாதன், ஹரீஸ்வரன் (கண்ணன்), ரவீந்திரன், மோகன்ராஜா, சிந்துஜா, ரேவதி ஆகியோரின் அருமை மாமியாரும்,

ரம்யானந்தா - தீபா, கிருபானந்தா - தர்ஷிகா, கௌதமி - லக்ஷ்மண், ஹரிதர்ஷன் - நித்தியா, அரிஸ்ரன் - உஷானி, சாதனா, ஷாருஜன், சஞ்ஜே, ஷமீரா, நிரேஷ், அதிதி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

அர்ஜுன், சனிக்கா, அகரன், அஞ்சலி, மல்லிகா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

நல்லமுத்து, காலஞ்சென்ற தவமணிதேவி, தம்பிராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், முத்துவேல், காலஞ்சென்ற புஷ்பா, சந்திராதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

கோமதி, பிரகதீஸ்வரன், சுந்தரேஸ்வரன், சுகந்தி, கவிதா, குகன், சுகிர்தா, சர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விஜய் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2026 00:00)