திரு. அமுர்தலிங்கம் காண்டிபன்
தோற்றம்: 14 டிசம்பர் 1986 - மறைவு: 28 டிசம்பர் 2024
திரு. அமுர்தலிங்கம் காண்டிபன் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், அமுர்தலிங்கம் - பூங்கோதை தம்பதியினரின் அன்பு மகனும்,
ரதன், வினோதினி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 30-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் வரை பொரளை ரேமண்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
