செல்வி. ஆனந்தி குலசேகரம்பிள்ளை (ராசாத்தி)
தோற்றம்: 09 செப்டம்பர் 1957 - மறைவு: 30 செப்டம்பர் 2021
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தி குலசேகரம்பிள்ளை அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
சந்திரா (லண்டன்), வரதராசன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரலிங்கம் (லண்டன்), சகுந்தலேஸ்வரி (தேவி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரணா (கனடா), றஜினா (கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
வினோதினி (கனடா) அவர்களின் அன்புச் சித்தியும்,அபிராம் (கனடா) அவர்களின் அன்புப் பாட்டியும்,
சாயீசன் (லண்டன்), ஜேனீவன் (லண்டன்), குபேரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஜெமா (Gemma- லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா இரத்தினாம்பிகை தம்பதிகள், கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பி கைலாயபிள்ளை அவர்களின் அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
