திருமதி அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை

(இளைப்பாறிய அதிபர் இராமநாதன் கல்லூரி)

அங்கயற்கண்மணி அம்மாள்  சிவப்பிரகாசபிள்ளை

தோற்றம்: 11 ஜூலை 1931 - மறைவு: 28 ஆகஸ்ட் 2020

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவ சின்னையா சிவப்பிரகாசபிள்ளை(குண்டுமணி மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சிவசக்தி(London), சிவநாதன்(Canada), சிவநேசன்(Canada), சிவசங்கர்(London), சிவகரன்(Australia), சிவகலை(Colombo), சிவகங்கா(Australia) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சிவனேசன், மைதிலி, உஷா, சொர்ணராணி,  சிவஅனுஜா, பிறேம்நாத், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவயோகன், சிவகுமரன், சிவகௌரி, சிவசங்கரி, லக்ஷன், சிவசுருதி, சிவப்பிரியை, சிவநங்கை, சிவகாமி, ஏடி, ஜோன், அனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
 
பைரவி, சிவமயூரி, நேத்ரி, கஸ்தூரி, கார்த்திகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
மியா, லிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
அன்னாரின் பூதவுடல் 29-08-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பி.ப 01:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து
30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்,சிவகரன்(மகன்)

தொடர்புகளுக்கு:-

சிவகலை - மகள் Phone : +94 11 272 1605

சிவநாதன் - மகன்  Mobile : +1 416 558 9512 

சிவசங்கர் - மகன் Mobile : +44 795 638 8523 

சிவகரன் - மகன் Mobile : +61 41 133 2382 

சிவகங்கா - மகள் Mobile : +61 42 190 3357

சிவநேசன் - மகன் Mobile : +1 514 984 6853 

www.tamilthakaval.org


"உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை! ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்….. இறைவன் மீது பக்தி கொண்டு, அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது…… “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும் “தாயினும் நல்ல தலைவன்…” என்றும் …. தாயை முன்னிலைப்படுத்தியே தங்கள் கருத்துகளைப் பாடல்களாய் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்."
- Eswampillai Vimalanathan  (Australia , 30/08/2020 15:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2020 12:40)