திருமதி அன்னலட்சுமி மகேந்திரா
மறைவு: 27 ஜனவரி 2024
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி மகேந்திரா அவர்கள் 27.01.2024 ம்திகதி சனிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற நடராசா - வாலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் ,
கனகராசா - அம்பிகை தம்பதிகளின் மருமகளும்,
காலம்சென்ற கலாபூஷணம் கனக மகேந்திரா (ஓய்வு நிலை அதிபர், JP) அவர்களின் மனைவியும்,
திருமதி. உ.ஹம்சானந்தி (ஆசிரியை தி/இ.கி.ச கோணேஸ்வரா இந்து கல்லூரி),
திருமதி. மெ. நிதர்சனா (வளவாளர்,வலயக்கல்வி அலுவலகம், திருகோணமலை), திரு. ம.மயூரதன் (நிறைவேற்று உத்தியோகத்தர் டோக்கியோ சீமேந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திரு. க. உமாசுதன் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்- மட்டக்களப்பு),
திரு. கி.மெக்கீவன் (தீயணைப்பு படைப்பிரிவு -திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வி. உ. ஆருக்ஷணி தி/ ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி), செல்வன் உ. ஆதீஸ்வர்
( தி இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரி) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
காலம்சென்ற அன்னபூரணம், திரு.வரதராசா, காலம்சென்ற அருளாம்பிகை, திரு. நவராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 29. 01. 2024 ம்திகதி திங்கட்கிழமை அன்று அதிகாலை 5.00 மணியளவில் வில்லூன்றி கந்தசாமி கோவில் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நண்பகல் 12.00 மணியளவில் யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 5.00 மணியளவில் வேம்பன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2024 08:34)
