திரு. அண்ணாமலை செட்டியார்

(லெட்சுமி ஜூவலர்ஸ் (காலி - கிட்டங்கி))

அண்ணாமலை செட்டியார்

தோற்றம்: 09 டிசம்பர் 1962 - மறைவு: 10 ஜூன் 2026

காலி - கலுவெல்ல கிட்டங்கியை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. அண்ணாமலை செட்டியார் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இரவு இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தப்பன் செட்டியார் - மணி மேகலை ஆச்சி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற பழனியப்பர் செட்டியார் - புஸ்பா ஆச்சி தம்பதியினரின் மருமகனும்,

அமுதா ஆச்சி அவர்களின் கணவரும்,

கண்ணப்பன், கபிலன், மிதுனா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

முருகப்பன் செட்டியார் (லெட்சுமி ஜூவலர்ஸ், செட்டியார் தெரு), முத்துராமன் செட்டியார் (இலண்டன்), கன்னன் செட்டியார் (லெட்சுமி ஜூவலர்ஸ், செட்டியார் தெரு), மீனாம்பிகை (மதுரை) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற மனோகரன் செட்டியார் - வெண்ணிலா ஆச்சி, சண்முகநாதன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி (மதுரை) ஆகியோரின் சம்பந்தியும்,

சிங் - ஆறுமுகம் செட்டியார் (சீர்காழி - இந்தியா), சுபசேகர் (இந்தியா) ஆகியோரின் சகலையும்,

முத்துகணேசன் (மதுரை) அவர்களின் மைத்துனரும்,

பரமேஸ்வரி ஆச்சி, உமாதேவி ஆச்சி ஆகியோரின் கொழுந்தனாரும்,

சரவணசுந்தரம் (துபாய்), கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,

லெட்சுமி, முத்தப்பன், வசந்தாமணி ஆகியோரின் சித்தப்பாவும்,

மணிமேகலை சுதிகல்யாணி, கல்கிசந்தோசி ஆகியோரின் பெரியப்பாவும்,

பத்மா ஜெயபாலன் ஆகியோரின் மாமாவும், சஹானா, யோகணேஸ், சங்கர் ஆகியோரின் சின்ன மாமாவும்,

தமனா, முத்தையா, சர்வில், அக்தியதேவ் மாறன், தளிர் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரது கிட்டங்கி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் காலி தடல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2026 00:00)