Mrs. Annapooranam Arasarathanam

Annapooranam Arasarathanam

Date of Birth: 16 August 1931 - Deceased: 29 January 2025

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணம் அரசரத்தினம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொக்குவிலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி - நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகராசா, தர்மலிங்கம், கமலம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருஞானம், தேவசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன் (ஜேர்மனி), சிறிதேவி (இலண்டன்), காலஞ்சென்ற கமலக்கண்ணன், திருமுருகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வேந்திரம், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

ஹரன் (கனடா), சர்வாங்கனி (இலண்டன்), கோபி (இலண்டன்), நந்தினி, நளினி (கனடா), திலீபன் (கனடா), மயூரன், உசானி (பிரான்ஸ்), சாளினி, சுகிர்தன், மைத்ரேயி (இலண்டன்), மாதுமை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நிலானி (ஜேர்மனி), சகனியா (ஜேர்மனி), சீமான் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், சாகித்யா (இலண்டன்), ராகவி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2025 05:00)