திருமதி அன்னபூரணம் இராசையா
(ஓய்வுபெற்ற ஆசிரியை- பலாலி சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 20 நவம்பர் 1933 - மறைவு: 22 ஜூலை 2022
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் இராசையா அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்செல்வம்(நோர்வே), ராஜேஸ்வரி(பிரான்ஸ்), அருள்பிரகாசம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகம்மா, கார்த்திகேசு, குணரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னமணி, பூமணி, அருணாசலம், வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரதிவதனா(நோர்வே), சுரேஷ்(பிரான்ஸ்), திலிபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஞ்சித், ராபின், அனுயன், பவிசன், தபி, கிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சபன், சபனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
