திருமதி. அன்னபூரணம் சிவசண்முகநாதன்

அன்னபூரணம் சிவசண்முகநாதன்

தோற்றம்: 02 மே 1940 - மறைவு: 14 ஆகஸ்ட் 2025

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை (கொச்சிக்கடை  தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய திருமதி. அன்னபூரணம் சிவசண்முகநாதன் அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று தனது 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை (மலாயன் பென்சனியர்) - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - குஞ்சரப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவசண்முகநாதன் (Banker) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் (நோர்வே), சிவவதனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேந்திரன் (நோர்வே), பகீரதி (நோர்வே ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷானு, , நிருஜா, கோபிதா, சிவவேதன், சஞ்ஜேய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, திருமதி. செல்லம்மா கதிர்காமத்தம்பி (தங்கம்மா) மற்றும் திருமதி. ரஞ்சினி நடராஜா (குஞ்சு) ஆகியோரின் சகோதரியும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2025 04:00)