திருமதி அன்னபூரணி (அன்னப்பு) சங்கரப்பிள்ளை
மறைவு: 31 ஜூலை 2024
யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rochester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபூரணி சங்கரப்பிள்ளை அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (ஆசிரியர்)- பார்வதி தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை (Retd Technical Officer - Highways Dept) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி (லண்டன்), ராஜ்குமார் (லண்டன்), வதனி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷ்ணகுமார் (லண்டன்), நளினகலா (லண்டன்), பாலகுமார் (பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷிகா, ரோஷன், ஜனோசன், லக்ஷி, டிலுஷன், கவினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சீதாலட்சுமி (கனடா), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இந்திராதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, கந்தசாமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இளங்கோவன் (கனடா), கலைச்செல்வி (கனடா), செல்வராணி, யோகராணி, சிவரூபன் (அவுஸ்திரேலியா), சியாமளா, காலஞ்சென்றவர்களான கருணாநிதி, சியாமினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம் (கனடா), தில்லைநாதன், பாக்கியராஜா, பூரணசந்திரன், வனிதா, தர்ஷி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகரட்ணம், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
