Srimathi. Annaporani Ammal Thuraichcha Iyyar
Deceased: 30 September 2026
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. அன்னபூரணி அம்மாள் துரைச்சாமி ஐயர் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை மாவிட்டபுரம் வீணியவரை இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி ஐயர் (மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்னை நாள் குரு ) அவர்களின் மனைவியும்,
சிவஶ்ரீ. துரை மணிவண்ண சிவாச்சாரியார் (கனடா), மாலதி (ஆசிரியை), சிவஶ்ரீ. துரை உமாசங்கரக் குருக்கள் (சுவிஸ் ஜெனீவா அற்புத விநாயகர் ஆலயம்), சிவஶ்ரீ. துரை உதயராகவக் குருக்கள் (மயூரபதி கொழும்பு), மலைமகள் (பூமா-சுவீடன்), உமா (கனடா) ஆகியோரின் தாயாரும்,
ஸ்ரீமதி. பிரகதாம்பாள் (றோஜா), சிவஶ்ரீ. பால கங்காதரக் குருக்கள், ஸ்ரீமதி. அபிராம சௌந்தரி, ஸ்ரீமதி. வத்சலா (அம்மு), காலஞ்சென்ற மோகனரஞ்சக் குருக்கள், பிரம்மஶ்ரீ. சுப்ரமணியசர்மா (சங்கர்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
