செல்வி. ஆன் சுமங்கலா குலநாயகம்

(Attorney-at-Law, M.A.(Human Rights and Democratisation))

ஆன் சுமங்கலா குலநாயகம்

தோற்றம்: 30 ஏப்ரல் 1990 - மறைவு: 26 மார்ச் 2025

யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல-70, மார்ட்டின் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஆன் சுமங்கலா குலநாயகம் (பழைய மாணவி - சுண்டுக்குளி மகளீர் கல்லூரி) அவர்கள் 26-03-2025 புதன்கிழமை இரவு காலமானார்.

அன்னார் சின்னத்துரை பெல்லா மற்றும் சூசைப்பிள்ளை மங்களம் தம்பதிகளின் பாசமிகு பேர்த்தியும்,

அன்னார், சேவியர் குலநாயகம் - தேவஜோதி தம்பதியினரின் பாசமிகு  ஏக புத்திரியும், 

ஜோசப் தர்மர், ஜேம்ஸ் நிமலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்ரனெற் பிலோனின் பாசமிகு மைத்துனியும்,

பெஞ்சமின் அருமைநாயகம்-புகிறிஸ்ரி தேவதாசன் -தேவராணி, றோய் மகிழ்ராஜா-தேவநாயகி ஆகியோரின் பெறா மகளும்,

தேவராஜன்-காந்தி, தனோதேவகுரு-சிந்தியா, ஜெயராஜா-மேரி ராணி, அன்ரனி ஜெயநாதன்-மேரி அமலோற்பநாயகி, அருச்சனா-மேரி நிர்மலா ஆகியோரின் மருமகளும்,

இளங்கோ (கனடா), சேரன் (கனடா), வாசுகி (கனடா), பிறிட்ஜெட் (அவுஸ்திரேலியா), அஞ்சலா (அவுஸ்திரேலியா), யோசேப் (அவுஸ்திரேலியா), கெனத் (பிரித்தானியா), றோய் (பிரித்தானியா), ஜோன் றுக்மன், டெபோரா றுக்ஷி, பீற்றர் நரேஷ் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

நடன் (பிரித்தானியா), டிலன் (பிரித்தானியா), அரன் (பிரித்தானியா), லூக் (பிரித்தானியா), சுபாசினி, தர்மேந்தாரா, தனேந்திரா, யுவனேந்திரா (பிரித்தானியா), இளஞ்செழியன், இளஞ்சோழன், இளஞ்சேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 31-03-2025 திங்கட்கிழமை மதியம் 01:30 மணியளவில் இல- 30 மார்ட்டின் வீதி யாழ்ப்பபாணத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவலயத்தில் பிற்பகல் 03:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2025 20:17)