Mrs. Anneswary Shanmugapillai
Date of Birth: 13 December 1949 - Deceased: 26 May 2025
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா கெசபதி - முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
மாதர் சபாபதி - மகாலட்சுமி (திருநெல்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலசுப்பிரமணியம் - காலஞ்சென்ற குகராணி (இலங்கை), பத்மநாதன் - சரஸ்வதி தேவி (கனடா), சிவானந்தராசா - ரட்ணஜோதி (அமெரிக்கா), செல்வராணி - கந்தசாமி (பிரான்ஸ்), பாலச்சந்திரன் - டொல்றோசியா வதனி (ஐக்கியராச்சியம்), சாந்தினி - கிருபானந்தன் (ஐக்கியராச்சியம்), பாஸ்கரன் - அரசமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் (இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியதர்சினி (பிரான்ஸ்), விஜயதர்சினி (ஐக்கியராச்சியம்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
சிறிசுதேஸ்கரன் (பிரான்ஸ்), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, பிரித்திகா, வர்ஷினி, கீரன், சகீரன், நிரோஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
