திரு. அந்தோனிப்பிள்ளை மரியதாசன்
(ஓய்வுபெற்ற தபால் அலுவலர்)
தோற்றம்: 03 ஜூன் 1941 - மறைவு: 30 ஏப்ரல் 2026
யாழ். ஊர்காவற்துறை காவலூரினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை - திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,
சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
பெனில்டஸ் (ஜோன்சன்), பமிலா (கனடா), டல்சினி, டெனிஷ்டன் (கனடா), விஜி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான மொனிக்கம்மா, அருட்சகோதரி செறபின் (ஓய்வுபெற்ற பிரதி அதிபர் - யாழ். புனித. பத்திரிசியார் ஆரம்ப பாடசாலை), லூர்தம்மா, நோயல் மற்றும் மலர் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
மரியதாசன் (கனடா) காலஞ்சென்றவர்களான ராசமலர், ராசபாலன் மற்றும் ராசபுஷ்பம் ஆகியோரின் மைத்துனரும்,
ரஞ்சினி, ரெமி (கனடா) விஜயரெட்ணம், பிரியா (கனடா), டிலீப் ஆகியோரின் மாமனாரும்,
நிரூஷணன், மிதுஷாயினி, ஜெய்சன், டானியா, றெக்ஷன், ஆகாஷ், செறின், ஜொகான், ஜோடன், டிவோன், விஷ்மிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் சரீரம் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-05-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஊர்காவற்றுறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
