Mr. Anthonipillai Savarimuthu
Date of Birth: 29 April 1938 - Deceased: 08 March 2024
கொழும்பை சேர்ந்த திரு. அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், மேரி ஜோசபின் (மலர்) அன்புக் கணவரும்,
டில்ஷான், கனீஷியஸ், அனுஷா ஜொஸ்லின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வராஹினி, டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிவானி, டிஹானி, கெவின், நெவின் ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்ற ஞானம்மா மற்றும் பிரான்சிஸ்கா (மணி), ரோசலின் (பேபி) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான லூர்துமேரி, ஜெயசீலி மற்றும் சேவியர், ராஜன், மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையும், 11-03-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
