Mr. Anthonippillai Jeyapalan

Anthonippillai Jeyapalan

Date of Birth: 10 December 1966 - Deceased: 10 June 2026

வவுனியா - பெரிய கோமரசன்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிப்பிள்ளை ஜெயபாலன் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை -  திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சௌந்தரநாயகம் - மதலேனாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குணநாயகி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனன்சியா, ஜெய்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூட் பிரவீன் (சுபோஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெயமலர், ஜெயசீலன், ஜெயசீலி, ஜெயரெட்ணம், காலஞ்சென்றவர்களான ஞானசீலன், ஜெயரூபி ஆகியோரின் பாசமிக சகோதரரும்,

செல்வநாயகம், செல்வமகள், அருளப்பு, அருள்ஞானவதனி, செல்வநாயகி, ஜொய்சி, ஜெயநாயகம், ரீற்றா மரியநாயகி ஆகியோரின் மைத்துனரும்,

செல்வக்கோன், ஜெயந்தினி, வேந்தக்கோன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி சடங்கானது 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் St Dunstan's Church (32 Bellingham Green, London SE6 3JB) இல் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் Grove Park Cemetery (Marvels Lane, London SE12 9PU) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும். 

 அன்னாரின் நல்லடக்கத்தினைத் தொடர்ந்த பிற்பகல் 2.00 மணியளவில் St Barnabas Church Hall (Downham Way, Downham BR1 5NZ) இல் நடைபெறும் மதியபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

ஜெசி (சகோதரர்):- +44 786 171 2693

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2026 00:00)