திருமதி. அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் (றஞ்சி)

(இளைப்பாறிய ஆசிரியை - St. ஜேம்ஸ் மகளிர் பாடசாலை)

அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் (றஞ்சி)

தோற்றம்: 13 ஜூன் 1943 - மறைவு: 23 ஜனவரி 2025

இல- 35A, ஓடக்கரை வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சன்ஜோன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனவல் வின்சன்ற் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மத்தீனா, மத்தியாஸ், விக்ரோறியா, மரியநாயகம், வேதநாயகம், அருமைநாயகம், மேரி பெனிக்னா மற்றும் றெஜினா (லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அலோசியஸ், பாக்கியம், டோமினிக், குணம் மற்றும் மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)