திரு. அந்தோனி மனுவல்

அந்தோனி மனுவல்

தோற்றம்: 26 ஆகஸ்ட் 1931 - மறைவு: 09 டிசம்பர் 2024

"ஒளிவீசும் உந்தன் திருவதனம் இ்ன்று

  இருள் கொண்டு போனேனோ

விழி சேராமல் நமைக்காத்து நிற்கும்

  உனைக்காண்பது இனி எப்போது...

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி மனுவல் அவர்கள்  09-12-2024  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி - விக்டோரியா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகமணி லூசியா அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரன், சாந்தன், மேரிகிளாறா, குணசீலன், மேரிவிமலா, ஜெயந்தன், நிக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பவானி, விலட்னா, காலஞ்சென்ற கிறேசியன், பாமா, ஜெயக்குமார், சுஜாதா, மரிற்றா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பவுண் மற்றும் சுவைக்கீன் (சின்னத்தம்பி), காலஞ்சென்ற திரேசா, பிரான்சிஸ், லீனப்பு, றீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவான்சன், சுவர்ணிகா, செரூபினி, செறோயன், றெபேக்கா, பெனான்சன், பிளாவியோ, கிளெடியா, சின்சியா, ஜொனி, லிசானா, செரீனா, அரிசோன், நட்டாஷா, மைவா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லேவின், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மாலை  4:30 மணி வரை 31 rue Paul et Camille Thomeux, 93330 Neuilly sur Marne, France எனும் முகவரியில்  பார்வைக்காக  வைக்கப்பட்டு, 13-12-2024 பிற்பகல் 2.00 மணியளவில் Eglise saint-Baudile (76B place du Chanoine Heroux,9330 Neuilly-sur-Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் Cimetiere de Neuilly Sur Marne (Rue Paul et Camille Thomoux,93330 Neilly-Sur-Marne) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2024 08:29)