திரு. அந்தோனி செபஸ்தியாம்பிள்ளை
தோற்றம்: 14 ஜூலை 1943 - மறைவு: 22 ஜனவரி 2025
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி - சூசானம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மேரி கிளாரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரொமில், லெனாட், ரொனிக்ஸ், லெனின் (ராஜன்), கிறிஸ்டலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பொன்ராசா, பீட்டர், மேரி மார்க்ரேட், அலோசியஸ், பிலோமினா வென்சிலாஸ், அந்தோனி தேவராசா, டொமினிக், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-01-2025 வியாழக்கிழமை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் (இல-426/10, V.T.V Courts, Colombo-13) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதி ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
